பிக் பாஸ் வாய்ப்புக்காக நடந்த செ க்ஸ் டீல்!!

1354

எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒவ்வொரு நாளும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசாத மக்கள் இல்லை, அந்நிகழ்ச்சி பற்றி எழுதாத டிஜிட்டல் ஊடகங்கள் இல்லை. டிவி பார்க்காத பழக்கம் இல்லாதவர்கள் கூட பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக இரவு டிவி முன்பு ஆஜராகிவிடுகிறார்கள்.

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பாலிவுட்டில் சக்கைபோடு போட, தற்போது தென்னிந்தியாவிலும் பேவரைட் டிவி நிகழ்ச்சியாக உருவெடுத்திருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களின் நடவடிக்கைகளே பல பரப ரப்புகளை ஏற்படுத்த, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றாலும், அந்த நிகழ்ச்சி குறித்து சிலர் கூறும் புகார்களும், முன் வைக்கும் குற்றச்சாட்டுகளும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் செய்வதை விட சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில், பிரபல விஜே ஒருவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வேண்டும் என்றால் செ க்ஸ் டீல் செய்துகொள்ள வேண்டும், என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் கேட்டதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு தொலைக்காட்சி துறையில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருப்பவர் ஸ்வேதா ரெட்டி. இவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக புகார் கூறியுள்ளார்.

இது குறித்து ஸ்வேதா ரெட்டி கூறுகையில், “பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளர்களில் ஒருவராக என்னை தேர்வு செய்திருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறினார்கள். நானும் சம்மதம் தெரிவித்தேன். பிறகு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் எனக்கு போன் செய்து, “உங்களை ஒரு போட்டியாளராக தேர்வு செய்வதால் எனக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார்.

அவர் எதை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறார் என்பது எனக்கு புரிந்துவிட்டது. இதையடுத்து நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்று பாகங்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், தெலுங்கில் முதல் பாகத்தை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்க, இரண்டாம் பகுதியை நடிகர் நானி தொகுத்து வழங்கினார்.

வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் தெலுக்கு பிக் பாஸ் சீசன் 3 யை, நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்க இருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.