பிக்பாஸ் வீட்டில் சம்பளத்தைப் பற்றி உளறி கொட்டிய வனிதா!!

1293

பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளை செய்து முடித்தால், மட்டுமே அடுத்தடுத்த டாஸ்க்குகளை பிக்பாஸ் கொடுப்பார்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் நடந்து வரும் டாஸ்க்கில், ஷெரீன், ஷாக்சி மற்றும் மோகன் வைத்தியா ஆகியோரை கொலை செய்த குற்றவாளி, யார் என்பதை தான் கவீன், சாண்டி மற்றும் மீரா குழு கண்டுபிடிக்க வேண்டும்.

ஆனால் டாஸ்க் துவங்கி 3 நாட்களை கடந்துவிட்டதால், ஷாக்சி, ஷெரீன் மற்றும் மோகன் வைத்தியா வெயிலில் இருக்கிறார்கள், அவர்கள் கஷ்டப்படுகிறார்கள், இந்த டாஸ்க்கை விட்டுவிடுவோம் என்று சேரன் கூறுகிறார்.

ஆனால் கவீன் இத்தனை பட்ட கஷ்டம் வீணாகிவிடும் என்று கூற, அப்போது தீடீரென்று வரும் வனிதா, நாம் பிக்பாஸ் கேம் விளையாட்டிற்கு வந்திருக்கிறோம், குறிப்பிட்ட சம்பளம் பேசி வந்திருக்கிறோம், அதை மறக்காதீர்கள் என்று வனிதா தெரியாமல் உளறிவிடுகிறார்.

இதனால் பிக்பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள் என்பது தெரியும், ஆனால் அது நாள் கணக்கிலா என்ற சந்தேகம் இருந்த நிலையில், வனிதாவின் இந்த பேச்சு, ஒரு குறிப்பிட்ட தொகையே சம்பளமாக கொடுப்படுவது தெளிவாக தெரிகிறது.