கிரண் ரதோட்..

மும்பையில் பிறந்த 41 வயதான நடிகை கிரண் தமிழ் சினிமாவில் 2000 ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக புகழின் உயிச்சியில் கொடிக்கட்டி பறந்தவர். இவரின் கவர்ச்சியான உடல்வாகு மற்றும் எல்லையற்ற கவர்ச்சி காரணமாக பல திரைப்படங்களில் நடிக்க சந்தர்ப்பம் அமைந்தது.

பல ஆண்டு காலமாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த கிரண், திடீரென இன்ஸ்டாகிராமில் நுழைந்து, மிகவும் கவர்ச்சியாக ஃபோட்டோக்களை பகிர தொங்கினார். அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து, மீண்டும் பேசுபொருளாக மாறினார்.

இந்நிலையில் சமீபத்தில் வழங்கிய பேட்டி ஒன்றில், தன் வாழ்க்கையே நான் எடுத்த ஓர் தவறான முடிவால் தான் வீணாகிவிட்டது என்று பேசியுள்ளார். மேலும் எனக்கு திருமணம் ஆகவில்லை. நான் தனியாக தான் வாழ்ந்து வருகிறேன். பல திரைப்படங்களில் நடித்துகொண்டிருந்தேன்.

அந்த சமயத்தில், நான் தவறான ஒருவரை காதலித்தேன். அதனால், பல திரைப்படங்களில் நடிக்கும்வாய்ப்பை இழந்தேன். காதலில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி, பல திரைப்பட வாய்ப்புகளை தவறவிட்டேன். காதல், திருமணம் என வாழ ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். அதன் பின்னர், தான் அந்த நபரின் உண்மை முகம் வெளியே தெரிந்தது. காதல் தோல்வியில் இருந்து மிகவும் சிரமப்பட்டு மீண்டு வந்தேன்.

அதன் பின்னர் எனக்கு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் வரவில்லை. அந்த நபரை நான் காதலிக்காமல் இருந்திருந்தால், இப்போது , மிகப்பெரிய ஹீரோயின் ஆகியிருப்பேன். நான் செய்த மிகப்பெரிய தவறு தான் அந்த நபரை உண்மையாக காதலித்து அதனால் தான் என் வாழ்க்கையே இன்று தலைகீழாக மாறிவிட்டது. இப்போதும் நான் தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆசை படுகிறேன். வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் நடிப்பேன் என்று நடிகை கிரண் தெரிவித்துள்ளார்.



