கோலாகலமாக அரங்கேறிய பாகுபலி ராணாவின் திருமணம்…!

286

ராணா…..

பாகுபலியில் பல்வாள்தேவனாக மிரட்டிய நடிகர் ராணா டகுபதி, தன்னுடைய தேவசேனாவை நேற்று கரம் பிடித்தார்.

நட்சத்திர குடும்ப திருமணம் என்பதால், திருமணத்திற்கு வந்த 30 பேரில் பலரும் திரை நட்சத்திரங்களாகவே மின்னினர்.

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ராம்சரண், அல்லு அர்ஜுன், நாக சைதன்யா மற்றும் சமந்தா உள்ளிட்டோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

கொரோனா பரவல் காரணமாக இந்தியளவில் திரை நட்சத்திரங்களையும், ரசிகர்களையும் அழைத்து நடத்தி இருக்க வேண்டிய ராணா – மிஹீகா திருமணம், குறைந்த ஆட்களை கொண்டு, கோலாகலமாக களைகட்டியது. மிஹீகா பஜாஜுக்கு தாலி கட்டிய ராணா அவருக்கு மோதிரம் போடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ராணாவின் திருமண க்ரூப் போட்டோ வெளியாகி செம வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா வெளியிட்ட அந்த புகைப்படத்தில், ஏதோ சின்ன பொண்ணு போல கீழ் வரிசையில் அழகாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.