ஆட வரசொல்லிட்டு அப்படி பண்ணிட்டாங்க.. கோபத்தில் கொந்தளித்த மஹிமா நம்பியார்.. வைரல் வீடியோ!!

1315

மஹிமா நம்பியார்..

நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். இதையடுத்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது. தற்போது, சாந்தனு பாக்யராஜ்யுடன் குண்டுமல்லி படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் மஹிமா நம்பியார். அவ்வப்போது தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தினை பதிவிட்டு வருகிறார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

இதனிடையே, CS அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் மஹிமா நம்பியார் நடித்து வெளியாகியுள்ள படம் ரத்தம். இந்த படம் அக்டோபர் 6 ல் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் தான் பணியாற்றி வைக்கிறார். இப்படத்தில், ஒரு பாடலுக்கு நடனம் ஆட வைத்துவிட்டு கோபத்தில் கல்யாண் மாஸ்டர் டான்ஸ் எல்லாம் கிடையாது பேக் கப் என்று சொல்லி கோபத்தில் சென்றுள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் அமுதன் தான் இந்த படத்தில் பாடல்கள் கிடையாது என்று கூறியதாகவும், இதற்கு நடிகை மஹிமா நம்பியார் உங்க சண்டையை பிறகு வைத்துக் கொள்ளுங்கள். அமுதன் கல்யாண் நீங்கள் என்னுடைய நேரத்தை வீணடிப்பதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். என்ன பழக்கம் இது என்று கண்டபடி திட்டியுள்ளார். ஆனால், இந்த விஷயம் படத்தின் பிரமோஷனுக்காக தான் இவ்வாறு நடந்து கொண்டதாக நெட்டிசன் கிண்டல் செய்து வருகிறார்கள்.