மீண்டும் சினிமாவில் குஷ்பு : அரசியலில் இருந்து விலக திட்டம்!!

922

குஷ்பு, தீவிர அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவுக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ள அவரின் டுவிட்டர் பதிவிற்கு ஆதரவு குவிந்து.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக உள்ள குஷ்பு, தீவிர அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவுக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ள அவரின் டுவிட்டர் பதிவிற்கு ஆதரவு குவிந்து வருகிறது.

மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி கடந்த முறை போல, இந்தமுறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாமல் படுதோல்வியடைந்தது. இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல், அப்பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார்.

பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ள நடிகை குஷ்புவும், மீண்டும் நடிக்க வந்துவிடவா என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, குஷ்பு, டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, தாம் மீண்டும் சினிமாவுக்கு வர விரும்புவதாகவும் இது தொடர்பாக கருத்துகளை தெரிவிக்குமாறும் அவர் கேட்டிருந்தார்.

குஷ்புவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் ஆதரவு குவிகிறது. மனோபாலா, நடிகை கஸ்தூரி, நீத்து சந்திரா உள்ளிட்டோர், குஷ்பு மீண்டும் சினிமாவிற்கு வர ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அதனால் நீங்கள் இப்படி சிந்திப்பது இயல்பானதுதான். அரசியலில் நடிப்பதைவிட சினிமாவில் நடிப்பதற்கு அதிக வாய்புகள் கிடைக்கும் என ஒரு ரசிகர், பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.