ஜான்வி கபூர்..

80, 90 களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவரின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான தடக் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் தடம் பதித்தார்.

இதையடுத்து பாலிவுட் படங்களில் மும்முரமாக நடித்து வந்த ஜான்வி கபூர், தற்போது என்.டி.ஆரின் 30 படத்தில் நடித்து வருகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஜான்வி கபூர், படு கிளாமரான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையப்பக்கத்தில் ரசிகர்கள் வைரலாகி வருகிறது.



