தன்னை விட 14 வயது குறைவான இளம் நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா – ஷாக் ஆன ரசிகர்கள் ! – ஹீரோ யாருனா..?

214

நயன்தாரா………..

தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.

இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார் நயன்தாரா. மேலும், இந்த படத்தின் இளம் நடிகர் சரண் சக்தி ( வடசென்னை தனுஷின் மச்சான் ) ஹீரோவாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

நடிகை நயன்தாராவிற்கு தற்போது 36 வயது ஆகின்றது. ஆனால், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ள சரண் சக்திக்கு 22 வயது தான் ஆகின்றது.

ஒருவேளை பிளாஷ்பேக்கில் வரும் சின்ன நயன்தாரா காட்சிகளுக்காக இப்படி இளம் நடிகரை தேர்ந்தெடுப்பார்கள் என்று யோசிக்கத் தோன்றுகிறது