விவாகரத்து.. அந்த நடிகரை போல் கணவர்.. நடிகை திரிஷாவிற்கு இப்படியொரு ஆசையா!!

294

திரிஷா..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் தனது திருமணம் குறித்தும், தன்னுடைய வருங்ககால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும், விவாகரத்து குறித்தும் பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. அப்படி அவர் என்ன சொன்னார் என்பது குறித்து பாருங்க..

‘எனது கவனம் முழுவதும் தற்போது சினிமாவில் மட்டுமே உள்ளது. என்னுடைய திருமணம் குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளியாகிறது. ஆனால், திருமணம் குறித்து நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், திருமணம் செய்யும் நபர் நம் மனதிற்கு பிடித்தவராக இருக்க வேண்டும்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

திருமணத்திற்கு பின் விவாகரத்து செய்வது எனக்கு பிடிக்காது. அப்படி கஷ்டப்பட நான் விரும்பவில்லை’ என கூறியுள்ளார். மேலும், ‘அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் ஒரு ஜென்டில்மேன். நல்ல கணவராகவும், அப்பாவாகவும் அவர் இருக்கிறார். அவரை போன்ற ஒருவர் தான் கணவராக வர வேண்டும் என எந்த ஒரு பெண்ணும் விரும்புவாள்’ என நடிகை திரிஷா கூறியுள்ளார்.

இது பழைய பேட்டி என்றாலும் கூட திடீரென தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த பேட்டியை சில ஆண்டுகளுக்கு முன் திரிஷா கொடுத்திருந்தாலும், இந்த தகவல் திடீரென தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.