சூர்யாவின் சூப்பர் ஹிட் படத்திலிருந்து விலகிய விஜய் ! உண்மையை உடைத்த பிரபல நடிகர்…!

93

நடிகர் சூர்யா…….

நடிகர் சூர்யா சில வெற்றி படங்களை கொடுத்துள்ளார், இன்று அவருக்கான நேரம் சரி இல்லை என்பதால், தோல்வி படங்களையே தந்து வருகிறார் என ஒரு விமர்சனம் இருக்கிறது. இவரின் வெற்றி படங்கள் விஜய், அஜித் இன்னும் சில நடிகர்கள் வேண்டாம் என்று சொன்ன கதைகள் தான். 16, 17 வருடங்களுக்கு முன், இவர் நடிப்பில் வெளியாகி சொல்லி அ டித்த படம் “உன்னை நினைத்து” அந்த படத்தை இயக்கியது 90’S கிட்ஸ் ஃபேவரிட் விக்ரமன்.

இந்தப் படம் சூர்யாவின் சினிமா வாழ்கையில் பெண் ரசிகர்கள் வருவதற்கு இந்த படம் தான் அடித்தளமாக அமைந்தது. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது முகபாவங்களின் மன்னன் விஜய்தான்.

இவருக்கு கதை பிடித்துப் ஓகே கூட சொல்லிவிட்டார். அவ்வளவு ஏன் ஒரு சில சில ஷூட்டிங் கூட நடந்தது. விக்ரமன் , விஜய்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் விஜய் இந்த படத்தில் நடிக்க முடியாமல் ஆகியது.

அந்த படம் சூர்யாதான் நடிக்க வேண்டும் என இருப்பதால் அவர் உள்ளே நுழைந்தார். தற்போது, விஜய் இந்த படத்தில் நடிக்காமல் போனதற்கு காரணம் என்ன என்று நடிகர் ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

“சார் இனிமே காதல் கதைகள் எனக்கு வேண்டாம், நான் என் Route ஆக்‌ஷன் படங்களுக்கு மாற்றவுள்ளேன்” என்று கூறி நிராகரித்ததாக ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.