நடிகையின் அம்மாவிடம் அப்படி நடந்துகொண்ட தெலுங்கு நடிகர்.. கதறி அழுத குடும்பம்!!

592

நடிகர்..

திரிஷா – மன்சூர் அலிகான் சர்ச்சை ஒரு பக்கம். பிக் பாஸ் விசித்ரா கூறிய அதிர்ச்சி சம்பவம் மறுக்கம் என தொடர்ந்து நடிகைளுக்கு எதிராக நடக்கும் விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி ஒரு இளம் நடிகைக்கு நடந்த கொடுமை குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இளம் நடிகை ஒருவர் முன்னணி நடிகை ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நிலையில், தெலுங்கில் இருந்து அவருக்கு பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.

டாப் நடிகர்களில் ஒருவருக்கு தங்கையாக நடிக்க இந்த நடிகையை கமிட் செய்துள்ளனர். தனது அம்மாவுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆந்திரா சென்றுள்ளார் அந்த நடிகை. போனபின் தான் நடிகையின் குடும்பத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஹோட்டல் ரூமில் நடிகையும், அவருடைய அம்மாவும் தங்கியுள்ளனர். இரவு 10 மணிக்கு அந்த டாப் தெலுங்கு ஹீரோ, நடிகையின் ஹோட்டல் கதவை தட்டியுள்ளார்.

கதவை திறந்தவுடன் ரூமுக்குள் வந்த ஹீரோவை பார்த்து நடிகையின் தாய் புரிந்துவிட்டது. இவர் தன் மகளிடம் தவறாக நடந்துகொள்ள வந்துள்ளார் என்று. உடனடியாக ஹீரோவின் காலில் விழுந்து கதறி அழுதுள்ளார் நடிகை தாய்.

அந்த நடிகையும் எங்களைவிட்டு விடுங்கள் என கதறி அழுதுள்ளார். நீண்ட நேரமாக ஹீரோவின் கால்களை பிடித்துக்கொண்டு விடாமல் இருந்துள்ளார். அப்போது சில நிமிடம் யோசித்த அந்த ஹீரோ, நடிகையையும்,

நடிகையின் தாயையும் பார்த்து ஓடிவிடுங்கள், என் கண்முன் நிற்கக்கூடாது, நாளை உங்களை நான் பார்க்கவே கூடாது என கூறிவிட்டு, ரூமில் இருந்து வெளியேறுவதற்கு முன், அந்த நடிகையின் தாயை தனது கால்களால் எட்டி உதைத்துவிட்டு சென்றாராம்.

இதன்பின் உடனடியாக அந்த இரவே அங்கிருந்து நடிகையும், அவருடைய தாயும் கிளம்பி சென்னை வந்துள்ளனர். இப்படியொரு கொடுமை அந்த நடிகைக்கு நடந்துள்ளது என்று பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.