“பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது வரலாறு படைக்கப்படுகிறது ” – பிரியங்கா சோப்ரா..!

75

பிரியங்கா சோப்ரா…..

சுதந்திர போராட்டம் நாட்டிற்கு எண்ணற்ற வலுவான, தைரியம் மிக்க பெண் தலைவர்களை கண்டெடுத்தது என நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், நாட்டு மக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சுதந்திர போ ராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர்.

சரோஜினி நாயுடு, அம்ரித்கால், கமலாகால், கஸ்தூரிபா காந்தி, சரோஜினி நாயுடு உள்ளிட்ட சிலரின் பெயர்களும் படங்களும் இடம் பெற்றுள்ளன. அந்த வீடியோவை பதிவிட்டு அதில்,பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது வரலாறு உருவாக்கப்படுகிறது என தனது கருத்தையும் அவர் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

History is made when women take strides towards change. 🙏🏼#Happy74thIndependenceDay 🇮🇳 #womeninhistory #changemakers

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

அது மட்டுமின்றி, சுதந்திர போராட்டம் நாட்டிற்கு எண்ணற்ற வலுவான, தைரியம் மிக்க பெண் தலைவர்களை கண்டெடுத்தது எனவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.