ஜோதிகாவுக்காக இணையும் பிரபல நடிகர்கள்!!

812

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் ஜோதிகா எங்கிருந்து தான் இப்படி கதைகளை பிடிக்கிறாரோ என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்களின் மூலம் அசத்துகிறார்.

அந்த வகையில், ‘ராட்சசி’ அயை அடுத்து ஜோதிகா நடிக்கும் புதிய படம் நேற்று ஆரம்பமானது.

பொன்மகள் வந்தாள் என்ற பெயரில் உருவாகும் இப்படத்தில் இயக்குநர்களும் நடிகர்களுமான கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டியராஜனும், பார்த்திபனும் குருவின் படத்தில் முதல் முறையாக ஜோதிகாவுக்காக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.