யாராவது வந்து என் கையை பிடிங்க.. லிஃப்டில் பயந்து போய் மாளவிகா போட்ட பதிவு!!

481

மாளவிகா மோகனன்..

மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து,

கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார். அப்படி நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும், தனுஷின் மாறன் படத்தில் நடித்தார். ஆனால் இரு படத்திலும் சரியான ஸ்கோப் கிடைக்காமல்

போட்டோஷூட் பக்கமே சென்றுவிட்டார். தற்போது விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களால் மயக்கி வரும் மாளவிகா,

தற்போது லிஃப்ட்டில் இருந்து கொண்டு, டப்பிங் வேலைதான் எனக்கு மிகவும் பயப்படும் வேலை என்றும் யாராவது வந்து என் கையை பிடியுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார். தங்கலான் படத்தின் டப்பிங்கிற்காக மாளவிகா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.