கொஞ்சம் கொஞ்சமாக வனிதாவாக மாறும் மீரா!!

902

பிக் பாஸ் வீட்டிலிருந்து கடந்தவாரம் வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார். வனிதா வீட்டை விட்டு போனதால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்று நினைத்த ரசிகர்களுக்கு மீரா மிதுன் அந்த இடத்தை நிரப்புவார் போல் உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் வனிதா வெளியேறிய பின்பு அடுத்த வனிதா மீரா தான் என்று கூறி வருகின்றனர். அதற்கு ஏற்றவகையில் மீராவும் யார் என்ன சொன்னாலும் அவர்களிடம் சண்டை போட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரமோவில் பிக்பாஸ் கொடுக்கும் டிக்..டிக்..டிக் டாஸ்க்கின் போது, நிமிட நூலிழலையில் மீரா சொதப்ப, உடனே டாஸ்க் முடிந்தவுடன் கவீன் அவரிடம் நீ கொஞ்சம் வேகமாக வந்திருந்தால், நன்றாக இருக்கும் என்று கூற, உடனே மீரா அது எப்படி எல்லோரும் என்னையே குறை சொல்றேங்க என்று கத்துகிறார்.

கவீன் மன்னிப்பு கேட்டு, அது எப்படி ஒரு விஷயம் புன்படும் படு பேசிவிப்பு மன்னிப்பு கேட்டால், சரியாகிவிடுமா என்று கேட்கிறார். வனிதாவும் இதே போன்று தான் போட்டியாளர்கள் மன்னிப்பு கேட்டாலும், அவர்களை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்.

இதனால் அதை பார்க்கும் போது, மீரா கொஞ்சம் கொஞ்சமாக வனிதாவாக மாறுகிறார் என்பது தெரிகிறது.