நடிகை நாகு..

பொதுவாக சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை Item Dance ஆடுவதற்கென்றே நடிகைகள் இருந்தார்கள். ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, என இருந்தார்கள். ஆனால் அதன் பின் அந்த வேடங்களையும் ஹீரோயின்களே ஏற்க ஆரம்பித்துவிட்டார்கள் .

கவர்ச்சி நடிகைகளே கூச்சபடும் அளவுக்கு ஹீரோயின்களே தரை லோக்கலாக இறங்கி குத்தாட்டம் ஆட ஆரம்பித்தார்கள்.

இந்நிலையில், நாடோடிகள் படத்தில் யக்கா யக்கா மற்றும் மைனா படத்தில் ஜிங்கி, ஜிங்கி ஜிமிக்கி போட்டு என்ற பாடலின் மூலம் பிரபலாமான நடிகை நாகு புடவை கட்டியே குத்தாட்டம் போட்டு வந்தார்.

ஆனால், இப்போது மாடர்ன் உடைக்கு மாறி குத்தாட்டம் போட்டு கொண்டிருக்கிறார். சமீபத்தில், நந்தவன கிளியே என்ற படத்தில் மாடர்னான கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.


