ரச்சிதாவிற்கு இருக்கும் நோயால் தான் கணவரோடு சேர மறுக்கிறார்…. உண்மையை உடைத்த பிரபலம்!!

803

ரச்சிதா…

சின்னத்திரை சீரியல் நடிகையாக கன்னட மொழியில் அறிமுகமாகி தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் நடித்து பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதன்பின் சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த ரச்சிதா, நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதற்கு காரணம் குழந்தை இல்லை என்பதாலும், தினேஷ் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் செய்திகள் கசிந்தது. அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெளியில் வந்த ரச்சிதா, தினேஷ் மீது புகாரளித்து பிரச்சனை செய்தார். அதன்பின் தினேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சி செல்ல இருவர் சம்மந்தமாக விசயங்கள் பேசுபொருளாக மாறியது.

ஆனால் ரச்சிதா தந்தை மரணத்திற்கு பின் தினேஷுடன் சேர மறுத்து வருகிறார். இந்நிலையில் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ரச்சிதா குறித்த ஒரு உண்மையை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். சமீபத்தில் ரச்சிதா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரைவில் சாகப்போவதாக கூறி ஒரு பதிவினை பகிர்ந்தார்.

இதற்கு பயில்வான், ரச்சிதாவுக்கு சாப்பிடாமலே உடல் எடை அதிகரித்து வருவதாலும் சாப்பாட்டை கண்ட்ரோல் செய்தும் அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லையாம். இதனால் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டதால் தான் கணவர் தினேஷுடன் சண்டை போட்டு அவரை விட்டு பிரிந்து சென்றிருக்கிறார்.

இது தெரியாமல், ரச்சிதாவின் மாமனார் மாமியார் வெகுளியாக இருப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் பயில்வான் கூறியிருக்கிறார். சமீபத்தில், தினேஷ் எங்களின் ஈகோ தான் பிரச்சனையாக இருந்ததாகவும் அவரது பெற்றோர் அளித்த பேட்டியில், ரச்சிதாவின் சேர்க்கை சரியில்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.