கேப்டன் தோனிக்கு விண்ணப்பம் வைத்த கேப்டன் விஜயகாந்த்…!

82

கேப்டன் விஜயகாந்த்..

இரு தினங்களுக்கு முன், இணையதளங்களில் கிட்டத்தட்ட ஒரு மினி ஒப்பாரி வைத்து விட்டார்கள் நமது நெட்டிசன்கள்.

ஏன் என்றால் தோனி அவர்கள் நேற்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் அறிவித்துவிட்டார்.

அதற்கு பல ரசிகர்களும், பிரபலங்களும் வருத்தத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் கேப்டன் விஜயகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் தோனியின் ஓய்வு குறித்து “தோனி அவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டும், ஊக்கப்படுத்தும் விதமாக, பயிற்சி அகாடமி உருவாக்க வேண்டும்.

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பணியாற்றியதையும் தமிழக மக்கள் என்றும் நினைவில் கொள்வார்கள் “Captain Dhoni – A Cool and Great Captain” Dhoni ” என்று பெருமிதமாக கூறியுள்ளார்.