சுகன்யா மகள்..

தமிழில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகையாக புது நெல் புது நாத்து படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை சுகன்யா. அதன்பின் அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து வந்தார்.

கடந்த 2002ல் அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரே ஒரு வருடத்தில் 2003ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். பிடிக்காத திருமணத்திற்கு விவாகரத்து செய்ய பயப்பட வேண்டாம்.

அதெல்லாம் கடந்து தான் பெண்கள் வரவேண்டும் என்று நடிகை சுகன்யா தெரிவித்திருந்தார். அதேபோல் ஒரு அரசியல்வாதியின் கட்டுபாட்டில் இருந்ததால் தான் சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்ததாகவும் அவரால் தான் பாதி வாழ்க்கை நாசமாகிவிட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், சீரியல்கள் ஒருசில படங்களில் நடித்து வரும் சுகன்யா, மகளுடன் வசித்து வருகிறார். தன் மகளை மீடியாவில் இருந்து தள்ளி வைத்திருக்கிறார். தற்போது நடிகை சுகன்யாவின் மகளின் அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.



