ரசிகர்களை கவர்ந்த முக்கிய பட வாய்ப்பை தவறவிட்ட அமலா பால்!!

1298

அமலா பால்

நடிகை சாவித்ரியின் வாழக்கை வரலாற்றை திரையில் கொண்டுவந்த படம் மகாநடி. தமிழில் அது நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியானது. இதில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு இந்திய அளவில் பேசப்பட்டது. சினிமா ஜாம்பவான்களே பலரும் அவரை பாராட்டினர்.

தற்போது கீர்த்திக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும் வருகிறது இதனால் தான் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் இந்த பட வாய்ப்பு முதலில் தனக்கு தான் வந்தது என்று நடிகை அமலா பால்தெரிவித்துள்ளார்.

ஆனால் சொந்த பிரச்சனைகள் பல இருந்ததால் அதில் நடிக்க முடியாமல் போனது என கூறியுள்ளார் அவர். இந்த வாரம் திரைக்கு வரும் ஆடை படத்தின் விளம்பரத்திற்காக அவர் அளித்த பேட்டியில் தான் இப்படி கூறியுள்ளார் அமலா பால்.