இப்படியும் நடக்கிறதா? விதியை மீறியதால் பிக்பாஸ் கொடுத்த தண்டனை!!

1189

பிக்பாஸ் கொடுத்த தண்டனை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியுலக தொடர்பு இல்லாமல் வீட்டுக்குள் 100 நாட்கள் இருக்கவேண்டும். மதுகுடிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆனால் புகை பிடிப்பவர்களுக்கு மட்டும் அதற்காக தனியாக ஒரு அறை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அறைக்குள் ஒருவர் மட்டுமே இருக்கவேண்டும் என விதி உள்ளதாம். ஆனால் சாக்ஷி உள்ளிட்ட சில போட்டியாளர்கள் அடிக்கடி கூட்டமாக அந்த அறைக்குள் சென்று இருக்கிறார்கள் என பிக்பாஸ் இன்று தண்டனை கொடுத்துள்ளார்.

லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் வாங்கிய மார்கில் 100 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியாளர்கள்அதிர்ச்சியடைந்துள்ளனர்.