சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவராக இருக்கும் நடிகை தர்ஷா குப்தா, அவளும் நானும் சீரியலில் முக்கிய ரோலில் நடித்தார். அந்த சீரியலுக்கு பின் முல்லும் மலரும், மின்னலே போன்ற சீரியலில் நடித்தார்.
பின் செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து வந்த தர்ஷா, முகத்தில் அதிகப்படியான முகப்பரு வந்ததால் சீரியலில் நடிப்பதை சில மாதம் நிறுத்தினார். அதன்பின் குக் வித் கோமாளி 2சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்நிகழ்ச்சி மூலம் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். பின் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்தும் இருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா, கவர்ச்சியில் தாராளம் காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வந்தார்.
தற்போது மெடிக்கல் மிராக்கல் என்ற படத்திலும் நடித்து வரும் தர்ஷா, காதல் தினத்தை முன்னிட்டு சிகப்பு நிற ஆடையணிந்து, ரோஜாவை உடலில் முக்கிய பகுதியில் வைத்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.