படுக்கைக்கு அழைத்த நபர்.. குளிர்பானத்தில் போதை மருந்து.. 16 வயதில் நடிகைக்கு நடந்த கொடுமை!!

630

ரஷ்மி தேசாய்..

இந்தி சீரியல் மூலம் பாலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானவர் நடிகை ரஷ்மி தேசாய். பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் சீரியல் நடிகையாகவும் பிரபலமாகவும் இருந்து வருகிறார்.

16 வயதில் வேலை செய்யத்துவங்கிய ராஷ்மி, 20 வயதில் சினிமாத்துறையில் நடிக்க ஆரம்பித்தார். 2011ல் அவருடன் நடித்த நடிகர் நந்திஷ் சந்துவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட 2014ல் தனியாக வாழ்ந்து பின் 2015ல் விவாகரத்து செய்ய முடிவெடுத்து சட்டப்படி 2016 விவாகரத்து பெற்றனர். அதன்பின் பிக்பாஸ் 13ல் 3வது ரன்னர் அப் இடத்தையும் மற்றும் 14ல் 5வது ரன்னர் அப் இடத்தினையும் பிடித்தார்.

பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டும் சீரியல்களில் நடித்து மிகப்பெரியளவில் பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் 13ல் கலந்து கொண்ட போட்டியாளர் அர்ஹான் கானுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து 2020ல் பிரேக்கப் செய்து கொண்டார்.

அதன்பின் 4 ஆண்டுகளுகு பின் இந்தி மற்றும் பஞ்சாபி, குஜராத்தி மொழிப்படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், 16 வயதில் நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.

தன்னுடைய 16 வயதில் ஒரு ஆடிஷனுக்கு சென்ற போது அங்கிருந்த ஒருவர் எனக்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து தவறாக நடக்க முயற்சி செய்ததாக தெரிவித்தார். மேலும் வேறொரு சினிமா ஆடிஷனுக்கு சென்றபோது தன்னை ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாகவும் நடிகை ராஷ்மி தேசாய் தெரிவித்துள்ளார்.