நயன்தாராவையே மிஞ்சிடுவாங்களோ… 19 வயதான நடிகை அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

19287

அனிகா..

நடிகர் அஜித்குமார் – திரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குட்டி நட்சத்திரமாக நடித்து தமிழில் அறிமுகமாகியவர் அனிகா சுரேந்திரன்.

மலையாள குட்டிப்பெண்ணாக பல படங்களில் நடித்து வந்த அனிகா, என்னை அறிந்தால் படத்திற்கு பின், நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கர், மிருதன், தி கிரேட் ஃபாதர், ஜானி ஜானி எஸ் பாப்பா போன்ற படங்களில் அடுத்தடுத்து குட்டி நட்சத்திரமாக நடித்திருந்தார்.

கடந்த 2015ல் அஜித் – நயன் தாரா கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற விஸ்வாசம் படத்தில் ஸ்வேதா ரோலில் நடித்தார் அனிகா. தன்னுடைய சிறப்பான நடிப்பை காட்டி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இதன்பின் தன்னுடைய 14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்றும் போகபோக இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையான கிளாமர் போட்டோஷூட்டையும் எடுத்து வெளியிட்டார்.

அதன் பயனாக 17 வயதில் தி கோஸ்ட், புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் நடிக்க கமிட்டாகினார். மேலும் கதாநாயகியாக 18 வயதில் நடித்த அனிகா படுக்கையறை, முத்தக்காட்சியிலும் நடித்து ஷாக் கொடுத்தார்.

தற்போது பிடி சார், வாசுவின் கர்ப்பிணிகள், தனுஷ் இயக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் க்யூட்டான ஆடையில் கோயம்பத்தூர் கல்லூரி விழாவிற்கு சென்று அனைவரையும் ஈர்த்துள்ளார். அனிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.