பிக்பாஸில் கட்டிப்பிடிக்குறான்… தடவுறான் : என்ன நடக்குதுடா? வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்!!

1046

வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்

பிக்பாஸ் சீசன் 3 இந்த நிகழ்ச்சியில் பெண்கள் அணியும் உடையைப் பற்றி சர்ச்சை இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது ஏன் பிக்பாஸ் வீட்டின் உள்ளே போட்டியாளராக இருக்கும் மதுமிதா கூட, ஆண்கள் இருக்கும் இடம், கொஞ்சம் உடை விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று கூறியிருந்தார்.

ஆனால் அந்த விஷயத்தில் உடனே அங்கிருந்த பெண் போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு எதிராக பேச, உடனே கமலும் அந்த வாரத்தின் உடை விஷயத்தில் எந்த ஒரு தவறும் இல்லை என்று கூறினார்.

மக்களோ பெண்கள் உடை அணியும் விதம் பிடிக்கவில்லை என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகரான காமெடி நடிகர் கூல் சுரேஷ், என்னடா அது பிக்பாஸ் வீடா? இல்ல வேறெதும்மா? கட்டிப்பிடிக்குறாங்கா? தடவுறாங்க என்று கூறிய வீடியோ வெளியிட்டுள்ளார்.