சின்ன வயதில் நடந்த சம்பவம் : நிவேதா பெத்துராஜ் கூறியுள்ள அதிர்ச்சி தகவல்!!

1378

நன்கு தமிழ் தெரிந்த தமிழ்நாட்டு பெண்கள் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஜெயிப்பது மிக கடினம் என்கிற நிலைமை தான் தற்போது உள்ளது.

அதையெல்லாம் தாண்டி ஜெயித்த சில தமிழ் நடிகைகளில் நிவேதா பெத்துராஜும் ஒருவர். ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமான அவர் அதன்பிறகு பல படங்களில் நடித்துவருகிறார். தற்போது கைவசம் பல படங்கள் வைத்துள்ளார் அவர்.

இந்நிலையில் தனக்கு சின்ன வயதில் நடந்த சம்பவம் பற்றி அவர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். சின்ன வயதில் அவரை மதுரை அருகே உள்ள மடப்புரம் காளி கோவிலுக்கு அழைத்து சென்றார்களாம், அங்கு அவருக்கு சாமி வந்துவிட்டதாம். அப்போது முதல் எனக்கு கடவுள் பக்தி அதிகம் என நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.