32 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன தாமிரபரணி பட நடிகை!!

10443

நடிகை முக்தா..

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்ற நடிகைகளில் ஒருவர் நடிகை முக்தா. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் 2007ல் வெளியான தாமிரபரணி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகினார் நடிகை முக்தா.

பானு கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். தமிழில் ரசிகர் மன்றம், அழகர் மாலை, சட்டப்படி குற்றம் போன்ற படங்களில் நடித்துள்ள முக்தா கதாநாயகி ரோலில் நடிக்கும் வாய்ப்பை இழந்து வந்தார்.

அதன்பின் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த முக்தா, 2015 ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து நடிப்பில் இருந்து சற்று விலகி வந்தார். கடைசியாக தமிழில் பாம்பு சேட்டை, சகுந்தலவின் காதலன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

தற்போது 32 வயதாகும் நடிகை முக்தா, மலையாள சீரியலில் நடித்து வருகிறார். தற்போது தாமிரபரணி முக்தாவா இது என்று கூறும் அளவிற்கு ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது, சேலையில் க்யூட்டாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.