நண்பர்களே அதை பார்த்து படுக்கைக்கு அழைப்பார்கள்.. ரகசியத்தை உடைத்த கிரண்!!

1404

கிரண்..

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கிரண் ரத்தோட். இப்படத்தினை தொடர்ந்து வின்னர், வில்லன், அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் வாய்ப்பில்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் இருந்து விலக ஒருவரை பைத்தியக்காரத்தனமாக காதலித்தது தான் காரணம்.

திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாகவும் அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் மனமுடைந்து போனதால் தான் சினிமாவில் இருந்து காணாமல் போக காரணம் என்று கூறியிருக்கிறார்.

சினிமாவில் நிறைய நண்பர்கள் இருப்பதாகவும் நண்பர்கள் என்று கூறும் அனைவரும் உண்மையான அக்கறையோடு பேசி நடிக்க வைக்கிறோம் என்று பேசுவார்கள். ஆனால் இரவு நேரத்தில் கால் செய்து படுக்கைக்கு அழைப்பார்கள். சினிமாத்துறையில் யாரும் நண்பர்கள் இல்லை என்று அப்போது தான் புரிந்தது.

பின் எனக்கான ஆப் ஆரம்பித்து கிளாமர் போட்டோஸ், விடியோஸ் போடுகிறேன். அப்படி புகைப்படங்களை பார்த்து பலர் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள். நான் மட்டுமா போட்டோஸ் பதிவிடுகிறேன், எல்லா நடிகைகளுமே இப்படி பதிவிடுகிறார்கள்.

நான் ஆபாச படத்தில் நடிக்கவில்லை, கவர்ச்சி புகைப்படங்கள் போட்டால் படுக்கைக்கு அழைப்பார்களா? இது எந்த விதத்தில் நியாம் என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார் நடிகை கிரண் ரத்தோட்.