படுக்கைக்கு அழைத்தார்.. நானும் சென்று கதவை மூடி.. நடிகை வித்யா பாலன் சொன்ன அதிர்ச்சித் தகவல்!!

1562

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை வித்யா பாலன். இவர் பெங்காலி மொழியில் ‘பலோ தேகோ’ திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர், கடைசியாக தமிழில் அஜித்துக்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வித்யா பலான், தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், என்னை ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். நான் விளம்பர படப்பிடிப்பாக சென்னை வந்தேன். அப்போது அந்த படத்தின் இயக்குனர் என்னை ஒட்டல் அறைக்கு வரும்படி கட்டாயப்படுத்தினார்.

அப்போது அவருடைய எண்ணம் என்னவென்று எனக்கு புரிந்துவிட்டது. நான் அந்த ஹோட்டல் அறைக்கு சென்று கதவை பாதி மூடி வைத்து அவரிடம் பேசினேன்.

இந்த மாதிரியான தவறான விஷயத்துக்கு நான் ஒத்துழைக்க மாட்டேன் என்று அவர் புரிந்துகொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். அதையடுத்து என்னை படத்தில் இருந்தும் நீக்கிவிட்டார் என்று வித்யா பாலன் தெரிவித்து இருக்கிறார்.