பிக்பாஸில் தர்ஷனிடம் மறைமுக காதலை கூறிய லொஸ்லியா : இதெல்லாம் கொஞ்சம் ஓவர்!!

1299

லொஸ்லியா- தர்ஷன்.

பிக்பாஸின் தற்போதைய சீசனில் பல காதல்கள் மறைமுக நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்று லொஸ்லியா- தர்ஷன். இருவரும் அண்ணன் தங்கையாக தான் பழகி வருகின்றனர் என்று தர்ஷனின் பெற்றோர்கள் கூறினாலும் லொஸ்லியா இன்று செய்த காரியம் சிறிது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இன்று வெளியான ப்ரோமோவிலேயே ஷெரின் தர்ஷனுக்காக சுட்ட ஹார்ட்டின் சாப்பாத்தியை லொஸ்லியா குத்துவதையும் மறுபடியும் சுட்டால் அதையும் குத்துவேன் என கூறுவதையும் பார்த்திருப்பீர்கள். பலரும் இந்த செயலை பார்த்து லொஸ்லியா ஓவியாவாக மாறுவதற்கு முயற்சி செய்கிறார் என்று கூறினர்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் லொஸ்லியா ஏன் அவ்வாறு செய்தேன் என்பதற்கான காரணத்தை சேரனிடம் கூறுகையில், எனக்கு அது பிடிக்கவில்லை. நான் இவனை(தர்ஷனை) சாப்பிடுவதற்கு அழைத்து கொண்டிருந்தேன். நான் சாப்பிட்ட பின் பேச வேண்டும் என்று அழைத்து கொண்டிருந்தேன்.

ஆனால் இவன் வரவில்லை. அதுவே கோபம் என்றார். அதற்கு நீ தர்ஷனை தானே குத்த வேண்டும் என சேரன் கேட்க, எனக்கு ஷெரீன் சுட்ட சப்பாத்தி பிடிக்கவில்லை, அதற்கு காரணம் கிடையாது. அடுத்தும் சுட்டாள், மீண்டும் குத்துவேன் என்று கூறினார்.