சென்னை Swiggy நிறுவன டெலிவரி தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்.! – இளம் நடிகை வெளியிட்ட கருத்து !

80

சனம் ஷெட்டி..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷனின் காதலி ஆவர். இவர் பெங்களூரை சேர்ந்த மாடல் . இவர் மாடலிங் மற்றும் நடிப்பை முன்னிலைபடுத்தி பணியாற்றி வருகிறார் .

சனம் ஷெட்டி 2012ல் வெளிவந்த அம்புலி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

இதையடுத்து இவர் கதம் கதம், சவாரி, சிபிராஜ் நடித்த வால்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹன்சிகா, சிம்பு நடித்து வரும் மஹா படத்தில் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் Swiggy நிறுவனத்தின் டெலிவரி ஆட்கள் வேலை நிறுத்தம் செய்திருப்பது குறித்து சனம் ஷெட்டி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ”பல வருடங்களாக Swiggy தான் எனக்கு உணவு அளித்து வருகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு நேரத்தில், உணவை அளிக்கும் இதன் பங்கும் பெரியது. இவை எல்லாவற்றுக்கும் காரணம் அதன் டெலிவரி ஆட்கள்தான்.

எந்த சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல், உயிரை பணயம் வைத்து அவர்கள் இந்த வேலையை செய்து வருகின்றனர். தற்போது அவர்களின் டெலிவரி கட்டனங்கள் மற்றும் Incentive Bonus குறைப்பட்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

இதனால் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் வேலை நிறுத்தத்தை தொடங்கியிருக்கிறார்கள் டெலிவரி தொழிலாளர்கள். எனவே, Swiggy நிறுவனம் அவர்கள் கோரிக்கைகளை ஏற்கும்மாறு கேட்டு கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.