“தயவு செஞ்சு எனக்காக என் பெயரை பச்சை குத்திக்காத” ரசிகருக்கு அட்வைஸ் செய்த அஜித் – வைரலாகும் வீடியோ…!

82

நடிகர் அஜித்குமார்..

எந்தவொரு திரைப்பட கலைஞரும், தல அஜித் குமாருடன் பணியாற்றி விட்டால் போதும் அவர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்பட நடிகர் அஜித்குமார் என்று மனம்திறந்து சொல்லிவிடுவார்கள்.

அப்படி என்னதான் வசியமருந்து வைத்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. வெற்றி அல்லது தோல்வியாக இருந்தாலும், அவர் பணிபுரிந்த இயக்குனர்களுடன் தொடர்பில் இருப்பதை அவர் ஒருபோதும் தவறவிடுவதில்லை.

அஜித் இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று ஒரு லெவலுக்கு வந்திருக்கிறார் நடிகர் அஜித். தான் செய்யும் உதவிகளை வெளியே தெரியாத அளவுக்கு செய்பவர்.

பிரபல துணை நடிகர் ஜெமினி மணி என்பவர் அஜித் நடித்த கிரீடம் படத்தில் நடித்திருந்தார். இவர் அஜித்தின் தீவிர ரசிகராக இருப்பதால் அவரின் வலது கையில் தீனாமணி என்று பச்சை குத்தியிருந்தார். இதை கண்ட அஜித், “என்னது இது?” என்று கேட்டார் உடனே உங்கள் பெயரைதான் பச்சை குத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

உடனே அஜித் அவர்கள் முகம் சிவந்து, “நான் உனக்கு என்ன பண்ணனு, நீ எனக்கு பச்சை குத்தின ? அதை தயவு செஞ்சு எடுத்துரு, உனக்குன்னு ஒரு குழந்தை இருக்கு குடும்பம் இருக்கு. நான் ஒரு சராசரி நடிகன் தான், இதெல்லாம் பண்றது எனக்கு பிடிக்காது.

தயவுசெய்து இந்த பச்சை குத்தியதை எடுத்துவிடு ஆனால் உனக்கு வலிக்காமல் மருந்து மாத்திரை மூலமாக எடுத்துவிடு அதுதான் எனக்கு சந்தோஷம்” என்று கூறியுள்ளார் ஆனால் இன்னும் ஜெமினி மணி என்பவர் அந்த பச்சை குத்தியதை எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.