கலக்கல் உடையில் அனுபமாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

5635

அனுபமா..

பிரேமம் படத்தில் நடித்த மூன்று நடிகைகளுமே அந்த படத்துக்குப் பிறகு முன்னணி நடிகைகளாகியுள்ளன. இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில், தமிழ், கன்னட ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது. மலையாள படமாக இருந்தாலும் சென்னையில் ஒரு வருடம் ஓடியது பிரேமம் திரைப்படம்.

அந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில்நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

அனுபமாவை தமிழில் நடிகர் தனுஷ் தன்னுடைய கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார்.

ஆனாலும் தெலுங்கைப் போல தமிழில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய க்யூட் புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் இப்போது சுருட்டை முடி பறக்க சைட் போஸில் போதையேற்றும் லுக்கில் போஸ் கொடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.