ஜிம் ஒர்க்கவுட்டில் முகம் சுளிக்க வைக்கும் ஆடையில் ஐஸ்வர்யா!!

73492

ஐஸ்வர்யாவும் தனுஷூம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஆண்டு ஜனவரி 17ந் தேதி அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர்.

இதனால், ஆரம்பத்தில் மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐஸ்வர்யா தனுஷூடன் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக மாறன் படப்பிடிப்பு நடந்த போது அவர் தங்கிய அதே ஓட்டலியே ஐஸ்வர்யாவும் தங்கினார். ஆனால், அப்போதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.

தனுஷின் பிறந்தநாளில் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதுவும் நடக்காமல் போனது. யாத்ரா மற்றும் லிங்காவிற்கான இருவரும் விவாகரத்து செய்யாமல் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் தங்கள் குழந்தைகளுடன் இருக்கின்றனர். இருந்தாலும், அம்மா, அப்பா பிரிந்து இருப்பது குழந்தைகளுக்கு நிச்சயம் பெரிய வலியாகவே இருக்கும்.

மகளை நினைத்து வருத்தப்பட்ட சூப்பர் ஸ்டார் தற்போது, படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல ஐஸ்வர்யா, கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து லால் சலாம் படத்தை இயக்கி இருந்தார்.

60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் வசூல் 15 கோடிகள் மட்டுமே வசூலித்து படுமோசமான நஷ்டத்தை சந்தித்தது. இப்படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்து இருந்தனர்.

இந்நிலையில், ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் பிரிந்து உள்ளனர். மீண்டும் ஒன்று சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆரம்பத்தில், மன அழுத்தத்தில் இருந்த ஐஸ்வர்யா தினமும் கடுமையான உடற்பயிற்சி செய்தும், புத்தகம் வாசித்தும் தனது கவலையை மறந்து இருந்தார். தற்போது, முகம் சுளிக்க வைக்கும் வகையில் இறுக்கமான ஜிம் ஆடையில் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.