90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சிம்ரன். நடிப்பு மட்டுமன்றி நடனத்திலும் பட்டையை கிளப்பிவிடுவார். சினிமாவை தாண்டி சிம்ரன் நிறைய சர்ச்சைகள், கிசுகிசுப்பில் சிக்கி இருக்கிறார்.
தற்போது அதை பற்றி பார்க்கலாம் வாங்க. சிம்ரன் முதல் முதலில் நடிகர் அப்பாஸை காதலித்தாராம். இவர்கள் இருவரும் விஐபி என்ற படத்தில் சேர்ந்து நடிக்கும் போது பல கிசுகிசுக்கள் வெளியானது.
ஒரு கட்டத்தில் சிம்ரனை அப்பாஸ் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இருவரும் காதல் உறவை முறித்து கொண்டாதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினார் நடிகை சிம்ரன். இருவரும் திருமணம் செய்துகொண்டவர் என்ற செய்திகளும் அப்போது வெளியானது.
ஆனால் சில காரணத்தால் இவர்களுடைய காதலும் முடிவுக்கு வந்தது. உலக நாயகன் கமல் ஹாசனுடன் தான் சிம்ரன் அதிகம் முறை கிசுகிசுப்பட்டு இருக்கிறார்.
பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் போன்ற படங்களில் சிம்ரன் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த சமயத்தில் இருவரும் லிவிங் டுகெதரில் இருக்கின்றனர் என்ற தகவல் பத்திரிகைகளில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.