சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருதை வென்ற முக்கிய பிரபலம் : குவியும் பாராட்டுக்கள்!!

975

தற்போது அனைத்து டிவி சானல்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும் ஒன்று விஜய் டிவி. ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என பல விதத்தில் மக்களை கவர்ந்துவிடுகிறார்கள்.

இதில் கலந்துகொண்டவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி ரசிகர்கள், ரசிகைகளை அதிக அளவில் பெற்றுவிட்டார்கள். அதில் டிடி, கோபிநாத் ஆகியோர் மிக முக்கியமானவர்கள்.

இதில் 5 ம் வருட விருது வழங்கும் விழா அண்மையில் நடத்தப்பட்டது. இதில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான (ஆண் பிரிவு) விருதை ரியோ பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரியோ தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.