22 வயது நடிகை தான் வேண்டும்.. அதற்கு ஆசைப்படும் 63 வயது மூத்த நடிகர்!!

1251

‘கிஸ்’ என்ற கன்னட படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீலீலா. இதைத்தொடர்ந்து பல முன்ணனி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ படத்தில் அவருக்கு மகளாக நடித்துள்ளார் ஸ்ரீலீலா. இந்த படத்தின் விழாவில் பேசிய நடிகர் பாலகிருஷ்ணாவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் , “22 வயதே ஆகும் நடிகை ஸ்ரீலீலா இந்தப் திரைப்படத்தில் எனக்கு மகளாக நடித்துள்ளார். ஆனால்,ஷூடிட்ங் தளத்தில் முழுவதும் மாமா மாமா என்று என்னை அழைத்து வந்தார்.

அடுத்த படத்தில் இவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார். மகளாக நடித்த ஸ்ரீலீலாவுடனே ஜோடி போட்டு நடிக்கப் போவதாக பாலய்யா கூறியிருப்பதை ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.