தமிழ் ராக்கர்ஸ் பிஸி : பிக் பாஸையும் விட்டு வைக்கவில்லை!!

942

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அடுத்தடுத்து புதுப்படங்களை திரு ட்டுத்தனமாக ஆன் லைனில் வெளியிடுகிறது. ஸ்டார் விஜய் டி.வி.யில் வெளியாகும் பிக் பாஸ் தொடரையும் விட்டு வைக்கவில்லை. கடாரம் கொண்டான், தி லயன் கிங் படங்களை ரிலீஸ் நாளிலேல்யே வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

அமலாபால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான ஆடை திரைப்படம் முதல் நாளில் காலையில் வெளியாக வில்லை. அதனால் அன்று அந்தப் படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியாவதில் இருந்து தப்பியது.

இது ஒருபுறம் இருக்க, சின்னத்திரையில் கொடிகட்டிப் பறக்கும் பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியையும் ஒவ்வொரு நாளும் உடனுக்குடன் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டு, நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை அதிர் ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

தமிழ் ராக்கர்ஸ் அவ்வப்போது தனது இணையதள முகவரியை மாற்றிக் கொண்டு இந்த அட்ராசிட்டியை அரங்கேற்றுவதால், அதற்கு மூக்கணாங்கயிறு போட முடியாமல் தடுமாறுகிறார்கள் சினிமா உலகினர்.
இந்தச் சூழலில் 20-ம் தேதி மாலையில் ஆடை படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டது.