ரச்சிதா…
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில்,
கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் இருந்துள்ளார். இதனிடையே, ரக்ஷிதா கருத்து வேறுபாட்டினால் தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையில், முன்னதாக சீரியல்களில் நடித்து வந்த ரக்ஷிதா தற்போது மூன்று தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களை தாண்டி கன்னடத்தில் ஒரு படம் நடித்துள்ளார். அந்த படத்திற்கு, ரங்கநாயகி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், ஜக்கேஷ் என்பவர் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரக்ஷிதா நடித்துள்ளார். 60 வயதான இவர் தற்போது பாராளுமன்ற எம்பி ஆக இருக்கிறார்.
ரக்ஷிதா தனது முதல் படத்தில் 60 வயதான நடிகருக்கு மனைவியாக கன்னட மொழியில் நடித்து வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கன்னடத்தில் இன்னொரு படத்திலும் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் மெய் நிகரே, ஃபயர் உட்பட 3 படங்களில் ரச்சிதா நடித்து உள்ளார்.
இந்த நிலையில், நடிகை ரக்ஷிதா மகாலட்சுமியின் பிறந்த நாளில் இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பயர் படத்திலிருந்து வீடியோ ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளது. அதில் சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு நடிகை ரக்ஷிதா கவர்ச்சியாக நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளன.
இது ஒரு புறம் இருக்க ரக்ஷிதா கன்னட திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான ரக்ஷிதா கன்னட இயக்குனர் ஒருவரை கரம்பிடிக்க உள்ளார் என்று இணையதளத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை.