திறந்தவெளியில் இப்படி மோசமான செயலை பண்ணலாமா? பிக்பாஸ் நிகழ்ச்சி மீது பரபரப்பு புகார்!!

969

பிக்பாஸ் நிகழ்ச்சி மீது புகார்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த இரண்டு சீசனும் மக்களை வெகுவாக கவர்ந்தது. அதே போல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியும் மக்களை கவர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை 16 பிரபலங்கள் போட்டியாளர்களா கலந்துகொண்டார்கள். இந்த நிலையில் புகையிலை ஒழிப்பு மக்கள் அமைப்பின்’ ஒருங்கிணைப்பாளர் சிரில் அலெக்சாண்டர், சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தனியாக புகார் அனுப்பியுள்ளார்.

அதில் பிக் பாஸ் வீட்டில் உள்ள புகைப் பிடிக்கும் பகுதி திறந்த வெளியில் பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது, புகை பிடிக்கும் பகுதி அமைக்க ஓட்டல்கள், விமான நிலையங்கள் போன்ற ஒரு சில இடங்களுக்குத்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் போன்று கோடிக்கணக்கானோர் பார்க்கும் நிகழ்ச்சிகளில் இடம்பெற அனுமதி இல்லை.

இவை புகையிலை ஒழிப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் மீதும், தொலைகாட்சி நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என புகாரில் கோரியுள்ளார்.