அவர் மோசமாக நடந்துக்கொண்டார்.. பிரபல நடிகை ஓப்பன் டாக்!!

488

அவிகா கோர்..

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை அவிகா கோர். இவர் கடந்த 2008 -ம் ஆண்டு வெளியான பாலிகா வடு என்று இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர். தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவிகா கோர், தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், கஜகஸ்தானில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, மேடைக்கு நடந்து சென்றேன்.

அப்போது பின்னாடி இருந்த யாரோ தொட்டதுபோல உணர்ந்தேன். இது ஒருமுறை மட்டும் நடக்கவில்லை. அதே போல இன்னொரு முறை நடந்தது, பின்புறமாக ஒருவர் தொட முயன்றார். ஆனால் நான் அதனை தடுத்துவிட்டேன்.அந்த நபர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.

அவரை நான் தண்டிக்கவில்லை. அந்த சமயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை, இப்போது நான் தைரியமாக இருக்கிறேன் என்னால் தவறு செய்பவர்களை தண்டிக்க முடியும் என்று அவிகா கோர் கூறியுள்ளார்.