கேப்ரில்லா..
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. 1999 ஆம் ஆண்டு பிறந்த கேப்ரில்லா. இளம் வயது முதலே நடிப்பில் ஆர்வம் காட்டி வந்தார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சி மூலம் முதல் முறையாக அறிமுகமானார் கேபி. அதன் பின் 7C என்ற தொடரில் இளம் நட்சத்திரமாக நடித்திருந்தார்.
கேப்ரில்லா முதல் முறையாக 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் தங்கையாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைக்கவே. பின்னர் சென்னையில் ஒரு நாள் படத்தில் நடித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு வெளியான அப்பா படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. என்ன தான் 3 படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற இவருக்கு அந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது. பிக் பாஸ் தொடரில் இறுதி வரை இருந்த கேப்ரில்லா . மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் தொடரில் இருந்து வெளியேறிய பின்னர் சீரியல் வாய்ப்பு தேடி வரவே அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார் கேப்ரில்லா.
இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 தொடரில் முக்கிய கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கேப்ரில்லா தொடருந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசும்போது தனக்கு சிறுவயதில் நடந்த ஒரு மோசமான சம்பவம் பற்றி பேசியுள்ளார்.
அதில் “நான் 10 ஆவது படிக்கும் போது என் அப்பா ஒரு ட்ரஸ் வாங்கித் தந்தார். அது கொஞ்சம் மாடர்னான ஆடை. ஆனால் அந்த ஆடை கிளாமராக எல்லாம் இருக்காது. ஆனால் அப்போதே என்னிடம் பலரும் “உன் அப்பா உனக்கு இந்த மாதிரி ட்ரஸ் எல்லாம் வாங்கித் தருகிறாரா?” எனக் கேட்டு டார்ச்சர் செய்தனர்.
10 ஆம் வகுப்பு படிக்கும்போது நடந்த கசப்பான சம்பவம்
அதுபோல நான் பத்தாவது படிக்கும் போதே என்னுடைய புகைப்படத்தை மார்ஃப் செய்து பரப்பிவிட்டனர். அது பொய்யானது என்றாலும் அப்படி தெரியாத மாதிரி தத்ரூபமாக உருவாக்கிவிட்டனர். இதைப் பார்த்து பலரும் அப்படியே நம்பி என்னைக் கேவலமாக பார்க்க ஆரம்பித்தனர். அந்த போட்டோவில் இருப்பது நானே இல்லை… ஆனால் என்னை மாதிரி அப்பட்டமாக சித்தரித்து வைத்திருந்தார்கள் .
எனக்கே ஒரு டவுட் வந்து விட்டது. ஒரு வேலை நானா இருக்குமோ? என்று எனக்கே தோன்றும் அளவுக்கு அந்த போட்டோவை எடிட் செய்து என்னை மோசமாக விமர்சித்தார்கள். நாள் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டேன். என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை கேவலமாக பார்த்தார்கள். நான் பள்ளிக்கு சென்றாலே என்னை மேலும் கீழுமாக நான் ஆடையே போடாதவள் போல் என்னை உற்று உற்றுப் பார்ப்பார்கள். இதனால் பல நாட்கள் நான் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே அழுது கொண்டு இருந்துளேன்
அப்போதெல்லாம் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். ஸ்கூலுக்கு செல்லாமல் அழுதுகொண்டே இருப்பேன். என் அப்பாதான் இதெல்லாம் ஒன்னுமே இல்லை என்று சொல்லி என்னைத் தேற்றினார்” எனக் கூறியுள்ளார். அப்போது குறுக்கிட்டு பேசிய கேபிரில்லாவின் அம்மா….என்னுடைய மகளின் அந்த மார்பின் புகைப்படம் பல பேரிடமிருந்து குறுஞ்செய்தியாக எனக்கு வந்து கொண்டிருந்தது . அதை பார்த்ததும் எனக்கு பயங்கர அதிர்ச்சையாகிவிட்டது.
நான் மிகுந்த கோபத்திற்கு உள்ளாகி பயங்கரமாக ரியாக்ட் செய்தேன்.ஆனால் என்னுடைய கணவர் அப்படியே எங்களுக்கு ஆப்போசிட்டானவர். ரொம்பவும் கூலா அத பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க…. இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல தூக்கிப்போட்டு அடுத்த வேலையை பாருங்க… என செம கூலாக சொல்லிவிட்டார்.எங்களுக்கு அது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது என அவர் கூறியிருக்கிறார் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது.