முகக்கவசம் அணிந்த தல அஜித்…! இணையத்தில் வைரலான வீடியோ…!

80

முகக்கவசம் அணிந்து செல்லும் அஜித்..!

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் முகக்கவசம் அணிந்துகொண்டு காரில் புறப்படும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கி வரும் இந்த படத்தில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு ஹெச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் 50 சதவீதம் முடிந்து விட்டதாக ஏற்கனவே படக்குழு தெரிவித்திருந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு மீதமுள்ள படப்பிடிப்புகள் நடைபெற்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்தநிலையில், பொது இடம், நிகழ்ச்சிகள் என நடிகர் அஜித்தை எங்கும் பார்க்க முடியாத அவரின் ரசிகர்களுக்கு சாமி தரிசனம் கிடைத்ததுபோல், இன்று அவரின் ஒரு வீடியோ வெளியானது. அதில் தல அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி ஆகியோர் காரில் வெளியே புறப்படவுள்ளனர்.

முன்னதாக கருப்பு நிற முகக்கவசத்தை பேசிக்கொண்டே அஜித் அணிந்துகொள்ளும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் வீடியோவை சமூக வலைதளங்களில் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.