வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ரம்யா பாண்டியன்.. வைரலாகும் வீடியோ!!

2329

ரம்யா பாண்டியன்..

2015 வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்து வரவேற்பை பெறாமல் இருந்தார்.

உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட ரம்யா பாண்டியன், உடல் எடையை குறைத்து மொட்டை மாடி போட்டோஷூட் வெளியிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதன்பின் ஆண் தேவதை படத்தில் நடித்தவர் குக் வித் கோமாளி முதல் சீசனில் போட்டியளராக கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

பின் கலக்கப்போவது யாரு 9 சீசனில் நடுவராகவும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அனைவரையும் ஈர்த்து 3வது ரன்னர் அப் இடத்தையும் பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனிலும் 2வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.

ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். இவர் தற்போது வெறித்தனமான ஜிம் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.