நயன்தாரா இடத்தை பிடிக்க அமலா பால் கொடுத்த விலை!!

1102

அமலா பால்

விவாகரத்துக்குப் பிறகு நடிப்பதில் தீவிரம் காட்டி வரும் அமலா பால், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தவர், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் பேரார்வமாக இருக்கிறார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையோடு வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் அமலா பால், சம்பள விஷயத்திலும் சில சலுகைகளை வழங்க ரெடியாக இருக்கிறாராம். அவரது இத்தகைய கனவை நினைவாக்குவது போல அவருக்கு கிடைத்த படம் தான் ‘ஆடை’.

ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கும் அமலா பால், அப்படத்தை பெரிதும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார். அப்படத்திற்குப் பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அனைத்தும் தன்னையே தேடி வரும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்ததோடு,

தற்போது நம்பர் ஒன் நடிகையாக இருப்பதோடு, ஹீரோயின் சப்ஜக்ட் படங்களில் அதிகமாக நடிக்கும் நயன்தாராவின் இடத்தையும் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையை அவருக்கு ஆடை கொடுத்திருந்தது.

இதற்கிடையே, 19 ஆம் தேதி வெளியாக இருந்த ஆடை படம், தயாரிப்பாளரின் கடன் பிரச்சினையால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பதறிய அமலா பால், படம் வெளியானால் தான் தனது கனவு நினைவாகும் என்று படத்தின் மீதான பிரச்சினை தீரும் வரை படக்குழுவினருடனே பயணித்தவர் ஒரு கட்டத்தில்,

பணம் தான் பிரச்சினை என்பதை அறிந்தவர், தனது சொந்த பணம் சுமார் ரூ.40 லட்சத்திற்கு மேல் வழங்கி பிரச்சினையை தீர்த்து படம் வெளியாக உதவி செய்ததாக கூறப்படுகிறது. அமலா பால் நம்பியிருந்த ‘ஆடை’ அவரை நயன்தாரா இடத்திற்கு கொண்டு செல்கிறதா இல்லையா, என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.