என் வாழ்க்கை நாசமா போனதுக்கு காரணமே அவரு தான்… நொந்து போய் பேசிய நடிகை மந்த்ரா!!

696

மந்த்ரா…

பிரபல நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலம் வந்தவர் தான் நடிகை மந்த்ரா. இவருடன் நடிக்க அடம்பிடித்த நடிகர்களின் லிஸ்ட் பார்க்கலாம். விஜய் நடிப்பில் 1997 -ம் ஆண்டு லவ் டுடே திரைப்படம் வெளியானது. இதில் இவருக்கு ஜோடியாக நடிகை சுவலட்சுமி. இதில் கதாநாயகியின் தோழியாக மந்த்ரா இருப்பார். இதில் விஜய் மந்த்ரா மீது கொண்ட கிரஷ்ஷால் தான் இந்த படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடிக்க வைக்குமாறு கேட்டு கொண்டாராம்.

1996 -ம் ஆண்டு அருண் விஜய் மந்திரா இருவரும் சேர்ந்து பிரியம் என்ற படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அருண் விஜய் மந்திரா இருவருமே காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காதலுக்கு அருண் விஜய்யின் பெற்றோர் சம்மதிக்கவில்லையாம்.

ரவிவர்மாவின் இயக்கத்தில் 1997ல் பிரபு மற்றும் மந்த்ரா காம்பினேஷனில் வெளியான படம் தான் தேடினேன் வந்தது. அவரின் அழகில் மயங்கிய பிரபு தனக்கு ஜோடியாக இந்த படத்தில் மந்த்ரா நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படம் நகைச்சுவை படமாக இருப்பின் அதிலும் தன் நடிப்பாற்றலை வெளிக்காட்டி இருப்பார் மந்த்ரா.

சுந்தர் சி இயக்கத்தில் 2000ல் வந்த இப்படம் இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்தது. இந்த படத்தில் கார்த்திக், மந்த்ரா மற்றும் திவ்யா உன்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். தான் நடிக்கும் இப்படத்தில் மந்த்ராவை நடிக்க வைக்குமாறு இயக்குனரிடம் கேட்டுக் கொண்டாராம் கார்த்திக். இதனை தொடர்ந்து மந்த்ரா ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் மற்ற கதாபாத்திரத்தையும் ஏற்று தன் நடிப்பினை வெளிக்காட்டி வந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பழமொழிகளில் நடிக்க தொடங்க இவர் தற்போது, துணை கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் 2003 ஆம் ஆண்டு தேஜா இயக்கிய ஒரு படத்தில் நடித்த மூலம் தன்னுடைய இமேஜை பாதித்து தனது கேரியரை நாசமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், அப்படத்தில் எல்லை மீறிய காட்சிகளின் நடித்ததால் அதன் பிறகு தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதாகவும், தன்னுடைய சினிமா வாழ்க்கையை இது பெரிதும் பாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.