பிக் பாஸில் புது போட்டியாளராக களம் இறங்கும் பிரபல நடன இயக்குநர்!!

1024

பிரபல நடன இயக்குநர்

பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் தமிழ் பிக் பாஸ் சீசன் 3 யில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

கடந்தவார எலிமினேஷன் ரவுண்டில் மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து புதிய போட்டியாளர்களாக யார் களங்க இறப்போகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். விரைவில் புதிய போட்டியாளர்களை களம் இறக்கும் முணைப்பில் நிகழ்ச்சி குழுவும் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 நேற்று தொடங்கியது. நாகர்ஜூனா தொகுத்து வழங்கும் இதில் புதிய போட்டியாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக உள்ள பாபா பாஸ்கரும் இடம் பிடித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி வரும் பாபா பாஸ்கர், ஜி.வி.பிரகாஷ் குமார், பார்த்திபன் நடித்த ‘குப்பத்து ராஜா’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.