விக்ரமின் கடாரம் கொண்டான் படத்திற்கு தடை விதித்த நாடு : கடும் வருத்தத்தில் ரசிகர்கள்!!

823

கடாரம் கொண்டான்

நடிகர் விக்ரம் மற்றும் அக்ஷரா ஹாசன் நடித்துள்ள கடாரம் கொண்டான் படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்தது.

மலேசியாவில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் கடாரம் கொண்டான் மலேசியாவில் வெளியாகவில்லை.

Film Censorship Board of Malaysia இந்த படத்திற்கு தடை விதித்துள்ளது என படத்தை விநியோகிக்கும் லோட்டஸ் பைவ் ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு உள்ள ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.