ஸ்ருதி ஹாசனுடன் கூட கமல் ரொமான்ஸ் செய்வார்.. பிரபல நடிகர் சர்ச்சை பேட்டி!!

229

ஸ்ருதி ஹாசனுடன்..

தமிழ், தெலுங்கு சினிமாவில் 1980, 90களில் பிரபல நடிகர்தான் சுமன். இவர் ரஜினி, கமலுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். இவர் நீண்ட காலத்திற்கு பிறகு சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சுமன், கமல் ஹாசன் குறித்து பேசிய விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் அவர் பேசுகையில், கமல் ஹாசன் ஒரு காதல் ஹீரோ.

அவருடைய ஆடை அலங்காரம் அன்றைய இளைஞர்களால் பெரிதும் பின்பற்றப்பட்டது. ஒரு ட்ரெண்ட் செட்டராக இருந்தார். கமல் ஹாசன் ரொமான்ஸ் செய்தால் அது மிகவும் இயல்பாக இருக்கும். அப்படி இருந்து தன்னுடைய இமேஜை பாதிக்கும் கதாபாத்திரங்களில் கண்டித்திருக்கிறார்.

எங்களை போன்ற ஹீரோக்களால் அப்படி நடிக்க முடியாது. நடிப்பு என்பது கமல் ஹாசனுக்கு கடவுள் கொடுத்த வரம். கமல் ஹாசன் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் கூட காதல் காட்சியில் நடிப்பார். இது அனைவராலும் செய்யக்கூடிய விஷயம் அல்ல என்று சுமன் தெரிவித்துள்ளார்.