சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தால் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்!!

1585

சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒருசில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

அதற்கான காரணம் என்ன என்று பலவிதமாக பேச்சுக்கள் எழுந்தது. அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் சமந்தா படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார். விவாகரத்துக்கு பின் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு,

அதிலிருந்து மீண்டு வர பல சிகிச்சை முறைகளை பயன்படுத்தி வருகிறார். சமீபத்தில் கூட சர்ச்சையான சிகிச்சையை பரிந்துரை செய்கிறார் என்று சமந்தா மீது விமர்சனங்கள் எழுந்தது.

அதற்கான விளக்கத்தையும் நடிகை சமந்தா கொடுத்திருந்தார். கிளாமர் ரூட்டில் எடுத்த புகைப்படங்களை பகிரும் சமந்தா, தற்போது செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.